அழகுக் குறிப்புகள்

பட்டுப்புடவையில் கறையா....? இதோ சூப்பரான வழிகள்...

Published On 2023-03-02 08:24 GMT   |   Update On 2023-03-02 08:24 GMT
  • பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது பட்டு புடவைக்கு தான்.
  • பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை.நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம்.

பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

ஒரு பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மையில்டான ஷாம்பு கலந்து பட்டுப் புடவையில் கறைகள் இருக்கும் இடத்தை மட்டும், இந்த பவுலில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து லேசாக கசக்கினாலே போதும் கறை நீங்கி விடும். இதனால் ஓரிடத்தில் இருக்கும் சாயம் மற்ற இடத்திற்கு மாறாது அதே நேரத்தில் துணியில் உள்ள கறையும் மாறாமல் இருக்கும்.

பட்டுப் புடவையை பராமரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சனை புடவையில் பட்டு விடும் எண்ணெய் கறை தான். அந்த கறைகளை போக்க கறை இருக்கும் இடத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை கொட்டி, ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். எண்ணெய் கறையை மொத்தமும் அந்த பவுடர் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு புடவையில் அந்த பவுடரின் கறை தெரியும். அதற்கு குகுளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து பவுடர் கறை இருக்கும் இடத்தில் லேசாக துடைத்து விடுங்கள். காய்ந்த பிறகு புடவையில் எண்ணெய் கறையும் இருக்காது, பவுடர் கறையும் மறைந்து விடும்.

பட்டுப் புடவையில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிளிசரின். பட்டுப்புடவையில் கறை இருக்கும் பகுதியின் அடியில் ஒரு வெள்ளை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கிளிசரனை பட்ஸ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். கறை இருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கிளிசரினை தடவ வேண்டும். துடைக்கும் போதே கறைகள் வந்து விடும் மிகவும் அழுத்தி துடைக்க கூடாது. கறை மொத்தமும் வந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கிளிசரின் வைத்து துடைத்து இடத்தில் துடைத்து விட வேண்டும். இதுவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். கிளிசரணை மட்டும் வைத்து துடைத்து விட்டு விட்டால் கிளிசரின் கம் போல இருக்கும் அது புடவையில் பிடித்துக் கொண்டு புடவை பார்க்க நன்றாக இருக்காது. இந்த கிளிசரின் வைத்து துடைக்கும் முறையை மட்டும் கவனமாக செய்ய வேண்டும். இது அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது அதே நேரத்தில் அதிகமாக சாயம் போக கூட புடவையில் இதை தேய்க்கும் முன்பு ஒரு முறை லேசாக தொட்டு பரிசோதித்து விட்டு அதன் பிறகு செய்து கொள்ளுங்கள்.

பட்டுப்புடவையில் எதிர்பாராமல் காபி, டீ, வேறு ஏதாவது கறை பட்டால் கவலைப்படவேண்டாம். பொராக்ஸ்பவுடரை தண்ணீரில் கரைத்து பட்டுப்புடவையை கொஞ்சநேரம் ஊறவைத்துவிட வேண்டும். பின்னர் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் துணியை அலசி பிழியாமல் புடவையிலுள்ள தண்ணீரை வடியவிட்டு காயவிட்டால் புடவையில் இருந்த கறை காணாமல் போய்விடும்.

Tags:    

Similar News