கழுத்தில் உள்ள கருமையை போக்க எளிய வழிகள்
- கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் கழுத்தில் கருமை தோன்ற ஆரம்பிக்கும்.
- கருமை நீங்க பாசிப்பயிறு மிகவும் உதவியாக இருக்கும்.
சிலருக்கு முகம் முழுவதும் பளிச்சென்று இருந்தாலும், கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இது போல கண்டிப்பாக நிறைய பேருக்கு இருக்கும். அது மட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் கழுத்தில் அதிக கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் இது போல கருமை தோன்ற ஆரம்பிக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் பல பேருக்கு கழுத்து கருமை பிரச்சனை அதிகம் இருக்கும். இந்த கருமை பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள்...
கழுத்து கருமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் சரியான பராமரிப்பின்மையே. இது சிலருக்கு மிக அடர்த்தியாக இருக்கும். இதனால் எவ்வளவு மேக்கப் செய்தாலும் அதில் பயனில்லாமல் இருக்கும். இதற்கு பாசிப்பயிறு மிகவும் உதவியாக இருக்கும். கழுத்து கருமை நீங்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. பாசிப்பயிரை சிறிது சூடு செய்து அரைத்து கழுத்தில் தடவி வந்தால் கருமையும் குறையும்.
முதலில் கழுத்தில் தயிரை தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்பு மஞ்சள், தேன் கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி விட்டு பாசிப்பயிறு, தயிர் சிறிது கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து கருமை குறையும். பாசிப்பயிரை அரைக்கும்போது கல்லுப்பு சிறிது சேர்த்து அரைத்தால் கெடாமல் இருக்கும். பின்பு தக்காளியை இரண்டாக நறுக்கி மஞ்சளில் தேய்த்து கழுத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீங்கும்.
அதன் பின்னர் 2 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, இதை கருமையான இடத்தில் கழுத்தை சுற்றி நன்கு தடவிக் கொள்ளுங்கள். பின்பு நன்கு உலர்ந்த பின்பு அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால் மீதம் இருக்கும் கருமை மற்றும் இறந்த செல்கள், அழுக்குகள், கிருமிகள் எதுவாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.
ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் கழுத்தில் கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்து 2 நிமிடங்கள் வரை நன்றாக தேய்த்து பிறகு துடைத்து எடுத்தீர்கள் என்றால் கழுத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி விடும்.