'ஆவி' பிடித்தால் சருமம் பொலிவடையும்...
- நீராவி (ஆவி) பிடிக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள்.
- சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கும்.
ஆவி பிடிக்கும்போது முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து போய்விடும். மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு நீராவி (ஆவி) பிடிக்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். ஆயுர்வேத மூலிகை இலைகளை கொதிக்க வைத்து ஆவி பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் ஆவி பிடிக்க வேண்டும் என்றில்லை.
வெறுமனே நீரை கொதிக்க வைத்து முகத்தில்படும்படி நுகர்வதும் சருமத்தை பாதுகாக்க உதவும். ஆவி பிடிக்கும்போது முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துபோய்விடும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களும் நீங்கும். கொலாஜன் செல்கள் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் சருமம் பொலிவடையும். இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பிரகாசமாகவும், பொலிவாகவும் காட்சி அளிக்கும். வாரத்தில் ஒரு முறையாவது ஆவி பிடிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இயற்கையாகவே சருமத்தில் சேரும் அழுக்குகள் அகன்றுவிடும். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட இது சிறப்பானது.