அழகுக் குறிப்புகள்

சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தக்காளி...

Published On 2023-04-02 06:01 GMT   |   Update On 2023-04-02 06:01 GMT
  • முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
  • சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

தக்காளிச்சாறு முக அழகிற்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.

முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள விட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.

தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.

கிளிசரின் உடன் தக்காளி சாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கருமை விரைவில் அகன்றுவிடும்.

முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்பசை அகன்றுவிடும்.

தினமும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை (Face pack) வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் அழகு ஜொலிக்கும்.

Tags:    

Similar News