null
கண் எரிச்சல், சோர்வு, சூடு நீங்கி குளுமையாக இருக்க இதை செய்துபாருங்க
- பெண்களின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள்.
- கண்களுக்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும்.
பொதுவாக ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அவளின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள். ஒருவருடைய பார்வை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைக்கு பலபேருடைய கண்களை பார்த்தால் கண்களில் சோர்வு தான் இருக்கிறது. எப்போதும் தூங்காததுபோல் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.
இதற்கு பல காரணங்களை சொல்லலாம். கண்ணுக்கு அழகை தருவது எப்போது என்றால் அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும். நன்றாக தூங்கவில்லை என்றாலும் கண்ணுக்கு அது ஆரோக்கிய குறைவுதான். அதனால் முடிந்தவரை நன்றாக தூங்க வேண்டும்.
ஆனால் நாங்கள் நன்றாக தூங்குகிறோம், ஆனால் எப்போது கண்களில் ஒருவித எரிச்சல் இருக்கிறது. கண்களில் குளுமை இல்லை. கண் வறட்சியாக இருக்கிறது என்றால் முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணித்து கண்களையும் குளுமைப்படுத்தும்.
இரண்டாவதாக முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய். இப்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தனித்தனியே துருவி எடுத்து பிழிந்தால் நன்றாக சாறு நமக்கு கிடைக்கும். இப்போது வெள்ளரிக்கா சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அதன்பிறகு அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் இதையும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது நமது கண்கள் மிகவும் குளிர்ச்சியடைந்து காணப்படும். எவ்வளவு உடல் சூடு இருந்தாலும் இதை வைத்த எடுத்த உடனேயே உங்களது கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியாக இருந்தால் காட்சியும் குளிர்ச்சியாக இருக்கும். நாமும் எல்லோரையும் கனிவுடன் பார்க்கலாம். இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். தொடர்ந்து நாம் இதனை 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களையும் இது நமக்கு போக்கி கொடுக்கும்.