அழகுக் குறிப்புகள்

முகத்தில் உள்ள முடிகளை போக்க இதை ட்ரை பண்ணுங்க!

Published On 2024-05-23 10:27 GMT   |   Update On 2024-05-23 10:27 GMT
  • முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது.
  • பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

இன்று பலரும் சரும ஆரோக்கியத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகின்றனர். சருமம் வறண்டு போகுதல், சரும அரிப்பு, எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இது பொதுவான பிரச்சினை. என்றாலும் இன்னும் சிலருக்கு கன்னங்கள், நெற்றி போன்றவற்றில் முடிவளர்ச்சி அதிகமாக இருக்கும். இது முகத்தின் அழகை கெடுக்கும். இந்த முடி வளர்ச்சியை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

முகத்தில் ஏற்படும் முடிவளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அமைகிறது. முகமுடி வளர்ச்சியை கட்டுப்படுத்த சில எளிமையான மற்றும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை காணலாம்.

முகத்தில் உள்ள முடியை நீக்கவும், முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பப்பாளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் உதவியாக இருக்கும். முதலில் பப்பாளியை மசித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி வர சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவிவிடலாம்.

அதேபோன்று கடலை மாவு மற்றும் மஞ்சள் பேக் கூட முகத்தில் உள்ள முடி பிரச்சனையை நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கடலைமாவு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு, சந்தனம் சேர்த்து ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி வரலாம். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவில் சோளமாவு கலந்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி நன்றாக காய்ந்த பிறகு ஈரத்துணி கொண்டு துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும்.

முகத்தை வறட்சி மற்றும் முகத்தில் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்க மைசூர் பருப்பை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் பால், தேங்காய் எண்ணெய் கலந்து பேக் மாதிரி முகத்தில் தடவி 30 நிமிடம் வரை வைக்கலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள முடிகளை நீக்கி வலுவலுப்புத்தன்மை அளிக்கிறது.

Tags:    

Similar News