பெண்கள் உலகம்

திருமணமான பெண்களுக்கு `அன்னையர்' தினத்தில் ஒரு அட்வைஸ்...

Published On 2024-05-12 07:58 GMT   |   Update On 2024-05-12 07:58 GMT
  • தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை.
  • தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் அற்புதமான விஷயம் என்னவென்றால் தாய்மை தான். அந்த தாய்மையை போற்றும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 12-ந்தேதி (இன்று) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனாலும் தாய்மை என்பது எல்லா பெண்களுக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை. அதிலும் பெண்களுக்கு சிக்கல்கள் பல உள்ளன. இருப்பினும் முன்பு உள்ள காலம்போல் இல்லாமல் தற்போது மருத்துவத்தில் டெக்னாலஜி ரொம்பவே முன்னேறி உள்ளது. அதனை சிலர் அறியாமை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் அறியாமல் உள்ளனர். அதிலும் சில பெண்கள் பயத்தின் காரணமாக தாமதமாக டாக்டரிடம் செல்கின்றனர். அடுத்து தவறான புரிதல்களினாலும் குழப்பத்தில் டாக்டரிடம் செல்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

அதை விடுத்து ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு இருக்கும் பிரச்சினையை டாக்டரிடம் எடுத்துக்கூறினால் ஆரம்பத்திலேயே அவர்களின் பிரச்சினையை சரிசெய்ய ஏதுவாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் வயதுவரம்பை பொறுத்துதான், கர்பப்பையில் கருமுட்டை வளர்ச்சி அடையும். வயது அதிகமாகும் போது பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சியும் குறையத் தொடங்கும். இதன் காரணமாகவும் தாய்மையும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

எனவே, டெக்னாலஜி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் இனியும் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது. ஏனென்றால் கருமுட்டை வளர்ச்சி அடையாத பெண்களுக்கு கூட தற்போது ஐவிஎப் (IVF)முறையில் கருமுட்டை செலுத்தி தாய்மை அடையச்செய்யும் வசதிகள் உள்ளன.

தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு மிக முக்கியமான கால கட்டம். பெருமைமிக்க பெற்றோராக மாறி இந்த உலகத்திற்கு புதிய வாழ்க்கையை அறிமுகப்படுத்துவது அவசியம். எனவே திருமணமான பெண்கள் ஒருவருடம் மட்டுமே தாய்மைக்காக காத்திருந்து பார்க்கலாம். இல்லையென்றால் தாமதிக்காமல் டாக்டரை அணுகுவதே சிறந்தது.

Tags:    

Similar News