பெண்கள் உலகம்
null

அரளி பூ.... வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா?

Published On 2024-05-17 08:24 GMT   |   Update On 2024-05-19 09:20 GMT
  • பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது.
  • செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது.

வீட்டில் செடி வளர்ப்பதற்கு கூட சாஸ்திர சம்பிரதாயங்கள் பார்க்க வேண்டுமா? என்று சிலர் சிந்திக்கலாம். நம் முன்னோர்களால் கூறப்பட்டிருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏதாவது ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். சில செடிகளை வீட்டிற்கு முன் வைக்கக் கூடாது என்றால், அதைக் கட்டாயமாக வீட்டிற்கு முன் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இதன்படி நிறைய பேரின் வீடுகளில் பொன் அரளிச் செடியை வீட்டிற்கு முன் வளர்த்து வருவார்கள். அதாவது மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரளிப்பூவை தான் பொன் அரளிச்செடி என்று கூறுவோம். இந்த அரளிச்செடி வீட்டில் வளர்க்கலாமா? இதோடு சேர்த்து சிவப்பு அரளி செடியையும் வீட்டில் வைப்பது சரியா? தவறா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


இந்த சிவப்பு அரளி செடியை நாம் எல்லோரும், வாகனத்தில் செல்லும்போது சாலையின் நடுவில் (lamp post) அதிகமாக வளர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம்? என்று பல பேருக்கு தெரிந்திருக்காது. பொதுவாகவே இந்த செவ்வரளி செடிக்கு காற்றை சுத்தப்படுத்தும் தன்மை இயற்கையாகவே உள்ளது. காற்றில் இருக்கும் கெட்ட சக்தியை தனக்குள் ஈர்த்துக்கொண்டு நல்ல காற்றை வெளிப்படுத்துவது தான் இந்த செவ்வரளி செடியின் தன்மை. அதாவது கார்பன் மோனாக்சைட், கார்பன்-டை-ஆக்சைடு இவைகளை தனக்குள் ஈர்த்து சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது. இந்த அறிவியல் உண்மை காரணமாகத்தான் இந்த செடியை காற்று மாசுபடும் இடத்தில், வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையில் அதை வைத்துள்ளார்கள்.

இதனால் இந்த செவ்வரளி செடியை நம் வீட்டில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் வீட்டிற்குள் வரும் காற்று சுத்தமாக வருவதற்கு இது ஒரு காரணமாக தான் இருக்கும். ஆனால் இந்த செவ்வரளி செடியில் இருக்கும் காயானது விஷத்தன்மை கொண்டது. விஷத்தன்மை கொண்ட காயை குழந்தைகளோ அல்லது தெரியாதவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடக் கூடாது என்பதற்காக இந்த செடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவார்கள்.


கூடுமானவரை இந்த சிவப்பு அரளிப்பூவை உக்கிரமான தெய்வங்களுக்கு சூட்டுவதால் வீட்டில் வைக்கக் கூடாது என்றும் கூறுவார்கள். இந்த இரண்டு காரணங்கள் தான். செவ்வரளி பூ முருகனுக்கும் மிக உகந்தது தான். சிவபெருமானும் தன் தலையில் செவ்வரளி பூ பூவை சூடி இருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் செவ்வரளி பூ செடியை முன் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். பின் பக்கத்திலும் வைத்துக்கொள்ளலாம். எந்த ஒரு பயமும் வேண்டாம்.

அடுத்தபடியாக பொன் அரளி பூவிற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொன் அரளி பூவை நம் வீட்டில் வைப்பதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்றும், வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டில் இடவசதி இல்லை என்றாலும் கூட, ஒரு சிறிய தொட்டியில் இந்த இரண்டு செடியையும் வைத்து வளர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News