பெண்கள் உலகம்

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

Published On 2024-11-24 03:44 GMT   |   Update On 2024-11-24 03:44 GMT
  • உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
  • மனஅழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.

பெண்கள் பொதுவாக மாதவிடாய் நாட்களில் வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் ஒருசில பெண்களுக்கு வலி இருக்காது. ஆனால் சில பெண்களுக்கு, தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். அவர்கள் அதிக வயிற்றுவலி, ரத்தப்போக்கு காரணமாக மிகவும் பலவீனமாக உணர்வார்கள். இது போன்ற நேரத்தில், பெண்கள் நடைபயிற்சி செய்யலாமா?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, மேம்பட்ட சுழற்சி, மனநிலை மேம்பாடு, மனஅழுத்த குறைவு, எடை கட்டுப்பாடு, ஒட்டுமொத்த நலவாழ்வு உள்ளிட்ட பல நன்மைகளை அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் நடை பயிற்சி தவிர சில உடற்பயிற்சிகளும் செய்யலாம் என்று மகளிர்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கவனமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.


மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்

மேம்படுத்தப்பட்ட ரத்தஓட்டம்

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது, உடலில் ஒட்டுமொத்த ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். அதன் மூலம் மாதவிடாய் பிடிப்பு கட்டுப் படுத்தப்படும்.

இதுதவிர, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வது. ரத்தப்போக்கை திறம்பட நீக்குகிறது, உடலில் வலி, வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.

மனநிலை மேம்படும்

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை வெளியிடுகின்றன. அக இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த இது உதவுகிறது.

பொதுவாக மாதவிடாய் நாட்களில் ஹார்மோன் மாற்றங்கள் மனநிலை மாறுபாடு அல்லது எரிச்சலை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்க்க, இந்த நாட்களில் நடைபயிற்சி செய்வது நல்லது.


மனஅழுத்தத்தை குறைக்கும்

மாதவிடாய் நாட்களில் பூங்கா, வயல்வெளி போன்ற இயற்கையான இடங்களில் அல்லது வீட்டுக்குள் ளேயே நடைபயிற்சி செய்யலாம். இது மனஅழுத் தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது. ஏனெனில், மாதவிடாய் நாட்களில் சாதாரணமாகவே மன அழுத்தம் அதிகரிக்கும். எடை கட்டுப்பாடு

சீரான உடற்பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக வழக்கமான நடைபயிற்சி, எடைக் கட்டுப்பாட்டுக்கு பெரிதும் உதவும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாம். சில மாதவிடாய் கால அசவுகரியங்களைத் தணிக்க வும் இது உதவுகிறது.


நலவாழ்வை மேம்படுத்தும்

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். இப்படி ஒட்டுமொத்த உடல் நலத்தையும் மேம்படுத் தும்.

சரி, மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்வதால் பாதிப்பே இல்லையா? அது குறித்தும் பார்க்கலாம்...

ரத்தப்போக்கு Surveillance மாதவிடாய் நாட்களில் நடைபயிற்ச உள்ளிட்ட உடற்பயிற்சி செய்யும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கலாம். இது தற்காலிக அதிகரிப்பு தான். ஆரோக்கியத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.


தசைச்சோர்வு

மாதவிடாய் நாட்களில் தீவிரமான அல்லது நீடித்த நடைபயிற்சி, தசைச்சோர்வை ஏற்படுத்தும். குறிப்பாக கால்களில் அதிகப்படியான உடல் உழைப்பு, சோர்வு. பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

சுகாதாரம்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது தமது சுகாதாரத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

Tags:    

Similar News