பெண்கள் உலகம்

இரவில் சரியாக தூங்காதவர்களுக்கு Fertility Issue's வருமா...?

Published On 2024-05-13 07:04 GMT   |   Update On 2024-05-13 07:04 GMT
  • தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
  • நமது மூளையில் சூப்பர் கிளாக் என்ற ஒரு பொருள் உள்ளது.

இன்றைய உலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதிலும் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் இரவுநேர வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாது இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. முடிகொட்டுதலில் தொடங்கி, ஹார்மோன் மாற்றம், ஸ்கின் பிராப்லம்ஸ் மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல், மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது குறித்த பதிவுகள் உங்களுக்காக...

இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். நமது மூளையில் சூப்பர் கிளாக் (suprachiasmatic nucles) என்ற ஒரு பொருள் உள்ளது. அது ஹைப்போதாலமஸ் என்ற இடத்தில் உள்ளது.

இது சூப்பர் கிளாக் கொடுக்கும் சிக்னல் மூலமாகத்தான் ஹார்மோன்ஸ் மற்றும் அனைத்து சிஸ்டமும் வேலை செய்கிறது. இந்த சூப்பர் கிளாக்குக்கான பவர் எங்கிருந்து கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...? சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்துதான். ஏனென்றால் சூரிய ஒளியின் வெளிச்சத்தில் இருந்து தான் செரோட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது.

இந்த சூப்பர் கிளாக்குக்கு சூரிய ஒளி இல்லாத இரவு நேரத்தில் தூங்காமல் உடலுக்கு கொடுக்கும் செயற்கையான வெளிச்சத்தால் உடலுக்கு எந்த சிக்னலும் கிடைக்காமல் போய்விடுகிறது.

எனவே உங்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் இந்த சூப்பர் கிளாக்குக்கு சரியான சிக்னல் கிடைக்காது. இதனால் அந்த ஹார்மோன்கள் வேலை செய்யாது. சரியான சிக்னல் உடலுக்கு கிடைக்கவில்லை என்றால் சர்க்காடியன் ரிதம் ஹார்மோன் (circadian rhythm) வேலை செய்யாது.

இதனால் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பிரச்சினை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பிரச்சினை வர அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே இவ்வளவு துல்லியமாக வேலை செய்யும் சூப்பர் கிளாக்குக்கு மதிப்பளித்து இரவு 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

Tags:    

Similar News