பெண்கள் உலகம்

அலுவலக வேலை, மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..?

Published On 2024-05-12 04:14 GMT   |   Update On 2024-05-12 04:14 GMT
  • உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள்.
  • மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள்.

வாரத்தின் ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் கொஞ்சம் 'ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற பணி சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

பயணம் மேற்கொள்ளுங்கள்

தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். பயணங்களில் கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

தினமும் எழுதுங்கள்

தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை, மகிழ்ச்சியான சம்பவங்களை மட்டும் எழுதத் தொடங்குங்கள். இது மனரீதியாக ஒரு மாற்றத்தை கொடுக்கும்.


காதலியுங்கள்

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.

Tags:    

Similar News