கருமுட்டை உறைதல் எப்படி நடக்கிறது?... இந்த சிகிச்சை யாருக்கெல்லாம் பயன்படும்?
- சினைப்பையைத் தூண்டி, முட்டை வளர்ச்சியையும் தூண்டும்.
- கருமுட்டைகளை உறையச் செய்கிற உங்கள் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.
* கருமுட்டைகளை உறையச் செய்வதென முடிவெடுத்துவிட்ட பெண்ணுக்கு, முதலில் அதன் சாதக, பாதகங்களையும், கருமுட்டைகளை உறையச் செய்வதன் பின்னணியில் உள்ள அறிவியலையும் மருத்துவர் விளக்குவார்.
*ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுக்கான சோதனைகள் செய்யப்படும்.
*கருமுட்டைகளை உறையச் செய்கிற உங்கள் சம்மதத்தை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.
*முட்டைப் பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் சோதிக்கப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஐ.வி.எஃப் மருந்துகள் கொடுக்கப்படும். இது சினைப்பையைத் தூண்டி, முட்டை வளர்ச்சியையும் தூண்டும்.
*அதன் பிறகு ஒரு ஹார்மோன் மருந்து கொடுக்கப்பட்டு, கருமுட்டைகள் வெளியே எடுக்கப்படும். இந்த முறையில் 10 முதல் 12 முட்டைகள் எடுக்கப்படும்.
*அந்த முட்டைகள் திரவ நைட்ரஜனில் 196 டிகிரி சென்டிகிரேடில் உறைய வைக்கப்படும். 10 வருடங்கள் வரை இப்படிப் பத்திரப்படுத்தலாம் என்கிறார்கள்.
*சம்பந்தப்பட்ட பெண் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராகும் போது, உறைய வைக்கப்பட்டுள்ள முட்டைகள் எடுக்கப்பட்டு, உறைநிலை போனதும், விந்தணுவுடன் சேர்த்து பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும்.
இந்த சிகிச்சை யாருக்கெல்லாம் பயன்படும்?
* வாத நோய்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்கிற பெண்களுக்கு.
* திருமணமாகாமல் தனித்து வாழ்கிற பெண்களுக்கு அல்லது ஸ்திரமற்ற திருமண உறவினால், குழந்தை பிறப்பைத் தள்ளிப் போட நினைப்பவர்களுக்கு.
* மரபு ரீதியாகத் தாக்கும் Turner's or fragile X syndrome நோய்கள் உள்ளவர்களுக்கு. இவர்களுக்கு சினைப் பையில் முட்டைகளின் இருப்பு ஆரம்பத்திலிருந்தே குறைவாகத்தான் இருக்கும்.
* சினைப்பையில் எண்டோமெட்ரியாசிஸ் என்கிற பிரச்னையோ, கட்டிகளோ உள்ளவர்களுக்கு.
* கருவை உறையச் செய்கிற 'Embryo freezing' என்கிற தொழில்நுட்பத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிற பெண்களுக்கு... அதாவது, தேவைக்கதிகமாக உறைய வைக்கப்படுகிற கருக்களை வீணாக்குவது என்பது சில மதங்களில் கருக்கலைப்புக்கு சமமாகக் கருதப்படுகிறது. அவர்களுக்கு கருமுட்டை உறைதல் (Egg freezing) என்பது சரியான மாற்றாக இருக்கும்.