பெண்கள் அதிகம் விரும்பும் மறுமலர்ச்சி பட்டு புடவைகள்
- கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
- பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.
கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-
கோடாலி கருப்பூர் புடவை
18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.
பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை
18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.
உப்படா கிளி சித்திர புடவை
மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.
இயற்கை வண்ண 2000 புட்டா புடவை
தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.
உடல்பேட்டு பேல்தார் புடவை
செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.
பவுன் புட்டா புடவை
பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
கந்தபெருண்டா புடவை
மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.
கமலம் புடவை
கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.