பெண்கள் உலகம்
null

பீரியட்ஸ் கால தாம்பத்திய உறவு... கருத்தரிக்க வாய்ப்பு இருக்கா?

Published On 2024-07-20 14:52 GMT   |   Update On 2024-07-21 07:50 GMT
  • சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும்.
  • ரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது

காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன.


'பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டா என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். வாய்ப்புகள் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. சிலருக்கு 21 நாள்கள் சுழற்சியிலும் சிலருக்கு 35 நாள்கள் சுழற்சியிலும் பீரியட்ஸ் வரும். 21 நாள்கள் சுழற்சியில் ஓவுலேஷன் எனப்படும் அண்டவிடுப்பானது 14 நாள்கள் முன்னதாக நிகழும். அதாவது பீரியட்ஸ் ஆனதிலிருந்து 7 அல்லது 8-வது நாள்... இப்படி 7 அல்லது 8-வது நாளில் முட்டை வெளியே வருகிறது என்ற நிலையில், அந்தப் பெண்ணுக்கு 6-வது, 7-வது நாளிலும் ப்ளீடிங் இருக்கும் பட்சத்தில், 'அதான் ப்ளீடிங் ஆயிட்டிருக்கே... கன்சீவ் ஆக வாய்ப்பில்லை' என்ற அலட்சியத்தில் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாம். முட்டை ரிலீஸ் ஆகிவிட்ட காரணத்தால், அந்த நாளில் வைத்துக்கொள்கிற தாம்பத்திய உறவால், கரு தங்கிவிட வாய்ப்புகள் அதிகம். எனவே, பீரியட்ஸ் நாள்களிலும் கருத்தரிக்கலாம் கவனம்..!

Tags:    

Similar News