பெண்கள் உலகம்

மாதவிடாய் கால கடுமையான வயிற்று வலியும்...சித்த மருத்துவத் தீர்வுகளும்...

Published On 2023-03-10 05:10 GMT   |   Update On 2023-03-10 05:10 GMT
  • ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம்.
  • சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி என்பது பெண்களுக்குத் தவிர்க்க முடியாதது. பொதுவாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கால் மற்றவர்கள் மீது எரிச்சல் , முகப்பரு, சோர்வான நிலை போன்றவையும் ஏற்படக்கூடியது சகஜம். அதேசமயம் தலைவலி, வாந்தி, கால்வலி, குறிப்பாக அடி வயிற்று வலி போன்றவை அவர்களை எந்தவித வேலையும் செய்ய முடியாத அளவிற்கு வாட்டும்.

இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி தோன்றும்.அடிவயிற்று பகுதியில் அதீத வலியிருக்கும். இந்த வலி இடுப்பு மற்றும் கால்களுக்கு பரவும். ஒரு சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். சிலருக்கு வலி உபாதை அதிகமாக இருக்கும். சில பெண்கள் பூப்படைந்த காலத்துக்கு பிறகு வரும் மாதவிடாய் முதல் திருமணம் வரையிலும் கூட இந்த வயிறுவலியை தீவிரமாக உணர்வார்கள். இந்நாளில் சுருண்டு படுத்துவிடுவார்கள். இந்த வலியைதாண்டி சிலருக்கு அதிக உதிரபோக்கு, உடல் பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் கூட உண்டாகும்.

மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, வாந்தி, முதுகுவலி இவற்றை 'டிஸ்மெனோரியா' (Dysmenorrhoea) என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்களுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது.இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.

இதற்கான சித்த மருத்துவத் தீர்வுகள்: 1) புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும். 2)திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மி.கி. எடுத்து அதை ஒரு கிராம் நல்லெண்ணெய்யில் கலந்து கொடுக்க வலி தீரும். 3) குன்ம குடோரி மெழுகு 500 மி.கி. வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும். 4) குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News