மென்சுரல் கப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்-தீமைகள்
- அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
- மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.
மென்சுரல் கப் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கணக்கிடும் போது அது மலிவானது தான். இது டாம்பன்கள் (Tampons) பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.
* நாப்கின் மற்றும் டாம்பன்களை விட மென்சுரல் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.
* அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
* இதை கருத்தடை சாதனம் ஐயூடி உடன் அணியலாம்.
* மென்சுரல் கப் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக உள்ளது. இது டேம்பன் போல் அல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.
* ஒரு முறை விலை கொடுத்து வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.
* மென்சுரல் கப் பாதுகாப்பானவை. இது ரத்தத்தை உறிஞ்சுகொள்ளாமல் சேகரிக்கிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் டேம்பன், நாப்கின் போன்று தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.
* தொற்று அபாயம் இல்லை. இந்த மென்சுரல் கப்பானது ஒன்று முதல் இரண்டு அவுன்ஸ் வரை உதிரத்தை வைத்திருக்கும்.
* டேம்பன் பயன்பாடு ஒரு அவுன்சிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வைத்திருக்க முடியும். இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை அல்ல.
தீமைகள்
* மென்சுரல் கப் பயன்பாடு குழப்பமானதாக இருக்கலாம். செருகுவது அல்லது அகற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். சரியான பொருத்தத்தை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.
* சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை உண்டாகலாம். பிறப்புறுப்பு எரிச்சல் ஏற்படலாம்.
* சில நேரங்களில் மென்சுரல் கப் அகற்றும் போது கசிவு உண்டாகலாம். செயல்முறையின் போது கசிவுகளை தவிர்க்க முடியாது. இதை செருகுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் சரியான அளவை அணிந்திருக்க மாட்டீர்கள்.
* மென்சுரல் கப் சரியான மடிப்பை பெறாத நிலையை சில நேரங்களில் உணரலாம். கப்பை வெளியே இழுப்பது சிரமமாக இருக்கலாம்.
* மென்சுரல் கப் எல்லாமே ஒரே அளவு கிடையாது. உங்கள் யோனிக்கும் பொருத்தமான ஒன்றை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நீங்கள் சரியான பிராண்டுகளை முயற்சிக்க வேண்டியிருக்கும்.
* பெரும்பாலான மென்சுரல் கப் லேடெக்ஸ் இல்லாத பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிலிக்கான் அல்லது ரப்பர் பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது யோனி பகுதியில் எரிச்சலையும் அரிப்பையும் மற்றும் பெண் உறுப்பில் பிரச்சனைகள் கூட உண்டு செய்யலாம்.
* மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாவிட்டால் யோனி எரிச்சல் அரிப்பு உண்டாகும். லூப்ரிகேஷன் இல்லாமல் கப் உள்ளே வைத்தால் அது அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.
* மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்யாத நிலையில் அது அந்தரங்க உறுப்பில் அதிக தொற்றை உண்டு செய்யலாம். அதனால் முறையாக மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.