null
வீட்டை சுத்தப்படுத்த சில எளிய வழிகள்
- காலையில் எழுந்ததுமே படுக்கையறையில் பெட் ஷீட்டை மடித்து வைத்துவிடுங்கள்.
- வீட்டின் தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களுக்குப் பதிலாக பழைய ஷாம்புவை பயன்படுத்தலாம்.
வீட்டை சுத்தமாக வைத்திருப்பது ஒரு கலை. சிலர் அதை ஒரு பெரிய வேலையாக கருதி, திணறிக்கொண்டிருப்பார்கள்.
அதிக சிரமமின்றியும், அதிக நேரம் எடுக்காமலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று பார்க்கலாம்...
சிங்க்: அனைவரும் உபயோகிக்கக் கூடியது சமையல் அறை 'சிங்க்' மற்றும் வாஷ் பேசின் என்பதால், அவை அழுக்கு கறைபடிந்து
அருவருப்பான தோற்றத்தை உண்டாக்கக்கூடும். சிங்க், வாஷ் பேசின் அழுக்கை சுத்தம் செய்வதற்கு, தண்ணீர் போகும் இடத்தில் வினிகரை ஊற்றுங்கள். பின்னர் அதில் பேக்கிங் சோடாவை தெளியுங்கள். தண்ணீர் வெளியே போகாதவாறு அதை மூடிவிடுங் கள். அரை மணி நேரம் அப்படியே வைத்து அதன் பிறகு வெந்நீர் ஊற்றி கழுவினால் சிங்க், வாஷ் பேசின் 'பளிச்' ஆகிவிடும்.
படுக்கையறை: காலையில் எழுந்ததுமே படுக்கையறையில் பெட் ஷீட்டை மடித்து வைத்துவிடுங்கள்.
இரவு தூங்கும்போது துணிகள், சாக்ஸ், புத்தகங்கள் போன்றவை கட்டிலின் மேல் இருந்தால் அதை ஷெல்ப்பில் வைத்துவிடுங்கள்.
வாரம் ஒருமுறை பெட்டை நகர்த்தி உதறிப் போடுங்கள். இவ்வாறு செய்தால் கட்டிலில் பூச்சிகள் தங்காது, தூசி சேராது.
பொதுவாக ஹால் சுத்தமாக தோன்றுவதற்கு, பொருட்களை ஆங்காங்கே போடாமல் எடுத்த இடத்தில் வைத்தாலே போதும்.
அழுக்குத் துணிகளை கதவிலோ அல்லது நாற்காலியிலோ போடாமல் துணி போடுவதற்கு இருக்கும் 'டப்'பில் போட்டு வைத்து விடவும்.
தரைகள்: வீட்டின் தரைகளை துடைப்பதற்கு ரசாயன பொருட்களுக்குப் பதிலாக பழைய ஷாம்புவை பயன்படுத்தலாம். அதை வைத்து வீட்டை துடைத்தாலே வீடு அழுக்கு அகன்று, பிரகாசிக்கும்.
சீலிங் பேன்: சீலிங் பேனை சுத்தம் செய்வதற்கு ஒட்டடைக்குச்சியை பயன்படுத்தாமல் பழைய தலையணை உறையை உபயோகிக்கலாம்.
பழைய தலையணை உறையை எடுத்து சீலிங்பேனின் இறக்கையில் மாட்டி மென்மையாக தலைப்பகுதியிலிருந்து நுனி வரை இழுக்கலாம். இதனால் தூசிகள் கீழே கொட்டி தரையை அழுக்குப் படுத்தாது.