வீட்டை சுத்தம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
- உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல.
- உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது.
பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து அழகுபடுத்துவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த சமயத்தில் வீட்டில் இருந்து ஒரு சில பொருட்களை அகற்ற வேண்டியது அவசியமானது. அத்தகைய எதிர்மறை பொருட்கள் வீட்டிற்குள் லட்சுமி தேவியின் வருகையைத் தடுக்கலாம். நிதி சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. அப்படி அகற்ற வேண்டிய பொருட்களின் பட்டியல் இது.
செயல் இழந்த கடிகாரம்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, செயலிழந்த அல்லது உடைந்த கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. ஏனென்றால், கடிகாரங்கள் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் சின்னங்களாக கருதப்படுகின்றன. அதனால் வீட்டில் ஓடாத, சேதமடைந்த கடிகாரங்கள் இருந்தால் அவற்றை அகற்றுவது நல்லது.
காலணிகள்:
பயன்பாட்டில் இல்லாத, சேதமடைந்த, தேய்ந்து போன காலணிகளை வீட்டில் வைக்கக் கூடாது. அவை எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிருஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
உடைந்த கண்ணாடி:
வாஸ்து சாஸ்திரத்தின்படி உடைந்த கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இவை வீட்டின் ஆற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜன்னல்கள், கதவுகளில் கண்ணாடிகள் உடைந்திருந்தால் அதனை சரி செய்துவிட வேண்டும். கண்ணாடி பாத்திரங்கள் ஏதேனும் உடைந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும்.
உடைந்த பாத்திரங்கள்:
உடைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதும் கூடாது. இத்தகைய பொருட்கள் குடும்பத்தில் வறுமை மற்றும் கஷ்டத்திற்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அவற்றை சீரமைத்து பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அப்புறப்படுத்திவிடுவதே சிறந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதுபோன்ற பொருட்களை வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்கும்.