பெண்கள் உலகம்

ஃபிரிட்ஜில் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?

Published On 2024-06-23 08:58 GMT   |   Update On 2024-06-23 08:58 GMT
  • ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம்.
  • துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம்.

'ஃபிரிட்ஜ்' எனப்படும் குளிர்பதன பெட்டி பலதையும் போட்டு அடைத்து வைப்பது பலரது வழக்கமாக உள்ளது. இதனால், ஃபிரிட்ஜ் கதவை திறந்ததுமே துர்நாற்றம் அடிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதைத் தவிர்க்கும் எளிய வழிகள் சில...

* ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு துண்டாக வெட்டிய எலுமிச்சையை போடுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை ஃபிரிட்ஜில் வைத்திடுங்கள். இப்படி செய்தால் ஃபிரிட்ஜில் தூர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும்.

* ஃபிரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்க பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை சிறிது தண்ணீரில் கலந்து, அதை கொண்டு ஃபிரிட்ஜை கத்தம் செய்யவும். இது ஃபிரிட்ஜில் தூர்நாற்றத்தை எளிதில் நீக்கிவிடும்.

* காபி கொட்டையின் உதவியுடனும் ஃபிரிட்ஜில் துர்வாசத்தை நீக்கலாம். காபி கொட்டைகளை ஃபிரிட்ஜில் வெவ்வேறு மூலைகளில் வைத்து இரவு முழுவதும் மூடி வைத்து, காலையில் ஃபிரிட்ஜை திறந்தால் துர்நாற்றம் அடிக்காது.

* ஃபிரிட்ஜின் துர்நாற்றத்தை நீக்க உப்பு போட்டு சுத்தம் செய்யலாம். வெந்நீரில் உப்பு கலந்து அந்த தண்ணீரில் துணியை நனைத்து ஃபிரிட்ஜை சுத்தம் செய்தால் துர்வாடை எளிதில் நீங்கிவிடும்.

* ஆரஞ்சு தோல்களை கொண்டும் ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்கலாம். இதற்கு ஆரஞ்சு பழத்தோலை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலே போதும். தூர்நாற்றம் தானாகவே மறைந்து விடும்.

Tags:    

Similar News