பெண்கள் உலகம்

பெண்ணின் ஆழ் மனது எண்ணம் என்ன?

Published On 2023-09-25 05:46 GMT   |   Update On 2023-09-25 05:46 GMT
  • ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
  • சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும்.

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான், நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன் நாடு உனக்கே என்றான்.

கேள்வி:- ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்று கேட்டான். (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியை கேட்டுவிட்டு விடை சொன்னால்தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்.)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரகிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள், விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும். உனக்கு நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?. அதற்கு அவன் என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னான்.

சூனியக்கார கிழவி சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம் என்றாள். இந்த பதிலை அவன் போரில் வென்ற மன்னனிடம் சென்று கூறினான், அந்த பதிலை அவன் தன் காதலியிடம் சொன்னான். எனவே அவர்களது திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதை கேள் என்றான். அவள் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்பு கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறி காட்சியளித்தாள். அவள் சொன்னாள், நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே வரும்போது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் என்று கேட்டாள்.

அவன் சற்றும் யோசிக்காமல், இது உன் சம்பந்தப்பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும் என்று சொன்னான். அவள் சொன்னாள், முடிவை என்னிடம் விட்டுவிட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்க தீர்மானித்துவிட்டேன் என்றாள்.

ஆம்! பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

Tags:    

Similar News