பெண்கள் உலகம்

பெண் தொழில்முனைவோர் கடன் திட்டம்

Published On 2023-08-22 10:31 GMT   |   Update On 2023-08-22 10:31 GMT
  • பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது.
  • பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது.

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இப்போது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் குடும்பத்தை கவனித்துக்கொண்டு இன்னொரு புறம் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பெண்கள் சமூகத்தில் முன்னேறி செல்கின்றனர். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது.

பெண்கள் அனைத்து துறையிலுமே முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனினும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமும் இருந்து, அதற்கு வழியில்லாத பெண்களுக்கு, தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி வருகிறது.

அந்தவகையில், பெண்கள் மேம்பாட்டு கழகத்தால், சிறப்பு கடன் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதுவும் மிக மிக குறைந்த வட்டியில். இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமான வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது. பேக்கரி, கண்ணாடி தயாரிப்பு, கேண்டீன், கேட்டரிங், பியூட்டி பார்லர், காபி பவுடர் தயாரிப்பு உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம். வட்டியே இல்லாமல் கூட இத்திட்டத்தில் கடன் கிடைக்கும்.

இதுமட்டுமல்லாமல் அரசிடமிருந்து 30 சதவீத மானிய உதவியும் கிடைக்கிறது. இப்படி பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண் சமுதாய வளர்ச்சிக்காகவும், தமிழக அரசு பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும்நிலையில், பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்காக, குறைந்த வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகை அளவானது, தொழில் முனைவோர் தரக்கூடிய திட்டத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உத்யோகினி திட்டம்

பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் கிராமப்புறம் மற்றும் முன்னேற்றம் அடையாத பகுதிகளில் உள்ள பெண்களை ஊக்குவித்து தொழில்முனைவோராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாகுபாடின்றி வட்டியில்லா கடன்களை வழங்குகிறது ஒவ்வொரு மாவட்டத்தின் நகராட்சி கிளைகளிலும் கடனுக்காக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மளிகை, பேக்கரி, ஊறுகாய் வணிகம் போன்ற 8 வகையான சிறு தொழில்களுக்கான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகின்றது. இந்த கடன்களைப் பெற 25 முதல் 62 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

அன்னபூர்ணா திட்டம்

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபின் முதல் தவணையை செலுத்தத் தேவையில்லை. கடனை எளிய தவணை முறையீல் 36 மாதங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்.

முத்ரா யோஜனா திட்டம்

பெண்களின் நிலையை மேம்படுத்த உதவும் கடன் திட்டம். பெண்களின் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி, வர்த்தகம், சேவை என மூன்று பிரிவுகளின் கீழ் ரூ. 50 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 36 மாதங்கள் அல்லது அதற்குமேல் தவணைக் காலத்தை நீடிக்கலாம்.

தேனா சக்தி திட்டம்

இது பொதுத்துறை வங்கியின் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சில்லறை வர்த்தகம், குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. கடன் தொகையாக ரூ. 20 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிற்கும் கடன்களுக்கான விதிமுறைகள் மாறுபடும். இத்திட்டத்தில் கடன் பெறும் பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில் 0.25  சதவீதம் விலக்கு கிடைக்கும்.

யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு சக்தியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி திறனை மேம்படுத்த, செயல்பாட்டு மூலதனத்திற்காக 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம். புதியா தொழில் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம். 2 லட்சம் வரை கடன் பெற எந்த வரம்பும் இல்லை ஆனால், 2லட்சம் முதல் 25 லட்சம் வரை கடன் பெற, உங்கள் தொழிலில் எதிர்பார்க்கப்படும் ஆண்டு விற்றுமுதலில் 15 சதவீதம் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் அதற்குமேல் வாங்குவதற்கு 15 சதவீதம் லாபம் வழங்குப்பட வேண்டும்.

ஸ்த்ரீ சக்தி திட்டம்

இத்திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு சில சலுகைகள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் திட்டமாக உள்ளது. பிசினஸில் பெரும்பான்மை பங்கை கொண்டிருக்கும் பெண்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். மேலும், இந்த பெண்முனைவோர் அவர்கள் வாழும் மாநிலத்தில் தொழில்முனைவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் இணைந்திருக்க வேண்டும் இத்திட்டத்தில் ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு வட்டியில் 0.05% விலக்கு பெறலாம்

Tags:    

Similar News