பெண்களின் ஹேண்ட் பேக்கில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை.... மறக்காதீங்க!
- பெண்கள் ஒருபோதும் ஹேண்ட் பேக் எடுத்துச் செல்ல மறப்பதில்லை.
- நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.
பொதுவாக பெண்கள் எங்கு சென்றாலும் தங்களது ஹேண்ட்பேக்கை எடுத்துச் செல்வார்கள். இதை அவர்கள் ஒருபோதும் எடுத்துச்செல்ல மறப்பதில்லை. இதனால் நமக்குத் தேவையான பொருட்களை அதில் வைத்து எடுத்துச் செல்லலாம்.
மேலும் பெண்கள் தங்கள் ஹேண்ட் பேக்கில் ஸ்நாக்ஸ், சாக்லேட், மேக்கப் கிட் போன்றவை தான் அதிகமாகவே இருக்கும். ஆனால், இவற்றை தவிர உங்களது பாதுகாப்பிற்காகவும், அவசர தேவைக்காகவும் சில பொருட்களை கண்டிப்பாக ஹேண்ட் பேக்கில் வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பணிபுரியும் பெண்கள் இதனை வைத்திருப்பதால் அவை நிச்சயம் உங்களுக்கு உதவும். அவை எது என்று இந்த பதிவில் பார்க்கலாம்....
ஹேண்ட் சானிடைஷர்:
பைக், ஸ்கூட்டி, பஸ், ரெயில் என பல வழிகளில் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்கிறார்கள். பயணத்தின் போது பல வகையான கிருமிகள் கைகளில் ஒட்டிக்கொள்வது மட்டுமின்றி, கைகளும் அழுக்காகிவிடும். மேலும் கைகளை உடனே, தண்ணீரில் கழுவுவது சாத்தியமில்லை. அச்சமயத்தில், சானிடைசர் நிச்சயமாக உங்களுக்கு உதவும். இதனால் பிரச்சனை ஏதும் இல்லை.
வாய் ஃப்ரெஷ்னர்:
அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்க வாய் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துங்கள். இது உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும். எனவே, இதை எப்போதும் கைப்பையில் வைத்திருக்க வேண்டும்.
தண்ணீர் பாட்டில்:
தண்ணீர் தான் உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் நாம் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே, உங்கள் கைப் பையில் தண்ணீர் பாட்டில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
மாத்திரை:
எப்போதுமே, காய்ச்சல் தலைவலியை குறைக்கும் மாத்திரைகளை உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தலாம் அல்லது தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கலாம்.
சானிடரி நாப்கின்:
ஒவ்வொரு பெண்களின் கைப்பையில் சானிட்டரி நாப்கின் அவசியம் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டும் சமயத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் இல்லையெனில், மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம்.
பெப்பர் ஸ்பிரே:
ஒவ்வொரு பெண்களும் தங்களது கைப்பையில் பெப்பர் ஸ்ப்ரே வைத்திருப்பது நல்லது. அது உங்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். இது ஒரு தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்.
சேஃப்டி பின்கள்:
உங்கள் டிரஸ்சில் திடீரென்று ஊக்கு இல்லையென்று உணரும் போது இது நிச்சயமாக உங்களுக்கு உதவும். எனவே சேஃப்டி பெண்களை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.