செய்திகள்
முதல்-அமைச்சருடன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. மோதல்
தமிழக சட்டசபையில் முதல்- அமைச்சர் பழனிசாமியுடன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TNAssembly
சென்னை:
தி.மு.க.வை சபைக்கு அழைக்க வேண்டுமென்று சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேசியதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர், முதல்-அமைச்சர் சொல்வது சரியான தகவல் அல்ல என்றார்.
உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையை சொன்னால் ஏன் எரிகிறது என்று கோபத்துடன் பதில் அளித்தார். அவருடன் அபுபக்கர் வாக்குவாதம் செய்தார்.
உடனே சபாநாயகர், “முதல்வர் பேசும் போது குறுக்கிட கூடாது. இதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்” என்றார். #TNAssembly