உள்ளூர் செய்திகள்

சேலத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி திட்டம் தொடக்கம்- மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2024-11-05 12:07 GMT   |   Update On 2024-11-05 12:07 GMT
  • கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

சேலம்:

தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பம்பாளையத்தில் இன்று கிராம காங்கிரஸ் வளர்ச்சி திட்டம் தொடக்க விழா நடைப்பெற்றது.

இதில் சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சுமார் 146 கிராமங்களை சேர்ந்த கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர், செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரத்தினவேல் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் எம்.பி.எஸ்.மணி, எடப்பாடி கோபால், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ்ஹெக்டே, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர் கார்த்திக் தங்கபாலு, மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இந்த கூட்டத்தில் கிராம காங்கிரஸ் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், பூரண மதுவலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. எடப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர், காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

Tags:    

Similar News