உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

Published On 2023-07-29 08:48 GMT   |   Update On 2023-07-29 08:48 GMT
  • கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
  • ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை அலுவலர்கள் ரோகித் ராஜ் , ஆனந்தன் , பொறியாளர் தளவாய் , கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாங்கனி அரிபாலகிருஷணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி கள் மடத்தூர் சத்யா, பாலமுருகன், பனையூர் வில்சன், சங்கீதா, சந்தன மாரி, கனகராஜ், மீளவிட்டான் ராமலட்சுமி, உமாதேவி ஆகியோர் மரக் கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் ஏற்பாட்டின்படி, வட்டார வளர்ச்சி அலுவலக காசாளர் முருகன் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி , 2023-ம் ஆண்டை கலைஞர் நூற்றாண்டு விழாவாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொண்டாடி ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு தேவையான முழு ஒத்துழைப்பு

வழங்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News