புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 1,588 மாணவிகளுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது- கலெக்டர் தகவல்
- ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.
மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.