அகஸ்தியர்பட்டியில் தெருநாய் கடித்து 14 பேர் காயம்
- 2 வயது சிறுமி பிரீத்தி உள்ளிட்டவர்களை தெருநாய் துரத்தி கண்டித்துள்ளது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை நாய் கடித்து தாக்கியதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.
சிங்கை:
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டி பகுதியில் சேக்கிழார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுமி பிரீத்தி, 6 வயது சிறுவன் மிதில், 13 வயது சிறுவன் சிவசங்கர் ஆகியோரை அப்பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் துரத்தி சென்று கண்டித்துள்ளது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 43), காந்திமதி நாதன் (76), வேலம்மாள் (61) ஆகியோரையும் நாய்கள் கடித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த நாய் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேரை கடித்து தாக்கியதாக அப்பகுதி யினர் புகார் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இது சாலையில் செல்லும் சிறுவர்கள் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரையும் கடித்து வருகிறது. நாய் கடித்து காயமடைந்தவர்கள் எங்கள் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால் சிவந்திபுரம் ஊராட்சி இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவே இல்லை. எனவே சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.