ஒரே நாளில் 1700 செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் தொடக்கம்
- நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
- தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
இந்திய அஞ்சல் துறை சார்பில், அம்ரித் பெக்ஸ் பிளஸ் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 25 குழந்தைகளுக்கு, நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகத்தினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடரா ஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா அஞ்சலக இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்க துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி, கந்தசாமி, அன்பு மற்றும் ஈசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்கா
ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.