- புள்ளியம்மாள் என்பவர் ஓடி வந்து மூர்த்தியை காப்பாற்றுவதற்கு முயன்றார்.
- மின்கம்பியில் இருந்து வந்த அதிக மின்அழுத்தம் காரணமாக வண்டியின் டயர் முழுவதும் எரிந்து நாசமாகியது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முள்ளேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் மூர்த்தி (வயது28). சம்பவத்தன்று மூர்த்தி மோட்டார் சைக்கிளில் சித்தேரி பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் குறுக்கே சென்ற மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. அந்த கம்பி மூர்த்தி ஓட்டி சென்ற வண்டியின் மீது விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்த வலியால் அலறினார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்தவர் புள்ளியம்மாள் என்பவர் ஓடி வந்து மூர்த்தியை காப்பாற்றுவதற்கு முயன்றார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார்.
அந்த மின்கம்பியில் இருந்து வந்த அதிக மின்அழுத்தம் காரணமாக வண்டியின் டயர் முழுவதும் எரிந்து நாசமாகியது.
காயமடைந்த 2 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அரூர் போலீஸ் நிலையத்தில் சித்தேரி பகுதியில் சரியான பரமரிப்பு இல்லாத காரணத்தினால் மின்வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.