தருமபுரி மாவட்டத்தில் 2 பேர் மாயம்
- டைப் ரைட்டர் பயிற்சி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.
- விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த பெரும்பாலை கொண்டம்பட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் தில்லைகரசி (வயது19).
இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதேபகுதியில் உள்ள டைப் ரைட்டர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார் இந்த நிலையில் நேற்று டைப் ரைட்டர் பயிற்சிக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பிவரவில்லை.
இதனால் பதறிப்போன பெற்றோர்கள் தில்லைக்கரசியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து தந்தை மாரிமுத்து பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் போகனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் பிரவீனா (வயது19). இவர் பெரியம்பட்டியில் உள்ள விடுதியில் தங்கி அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பி வருவதாக பெற்றோரிடம் கூறி விட்டு விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் அவர் கிடைக்காததால் மாணவி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாதையன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.