போதை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது
- பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர்.
- விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடி வழியாக கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனத்தில் பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்படுவதாக பர்கூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பர்கூர் சோதனை சாவடி பகுதியில் போலீசார் சோதனையை தீவிரப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மைசூர் தோஸ்த்து வாகத்தில் இருந்து சோளம்லோடு ஏற்றி கொண்டு ஒரு சரக்கு வாகனம் வந்தது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் தடை செய்ய ப்பட்ட பான் மசாலா குட்கா உள்பட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடகாவில் இருந்து பொருட்கள் கடத்தி கொண்டு பவானி மயில ம்பாடி உள்ள குடோனில்இ றக்குவதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ஆன்ஸ் 35 மூட்டை, விமல் பாக்கு 15 மூட்டை, வி.ஐ. டோபோகோ 3 மூட்டை, ஆர்.எம்.டி. 2 பாக்ஸ் உள்பட போதை பொருட்கள், சரக்கு வாகனம் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போலீசார் பவானி அந்தியூர் பிரிவு பகுதி சேர்ந்த அருண் (36), மற்றும் கொள்ளேகால் மாவட்டம் சாம்ராஜ்நகர் ராமாபுரம் கோபிசெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) ஆகிய பேரையும் போலீசார் கைது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.