உள்ளூர் செய்திகள்

நட்புக்கு பெற்றோர் எதிர்ப்பு: வீட்டைவிட்டு வெளியேறிய மாணவிகள் 2 பேர் சென்னையில் மீட்பு

Published On 2023-01-01 12:03 GMT   |   Update On 2023-01-01 12:03 GMT
  • மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது.
  • கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

வேளச்சேரி:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிகள் 2 பேர் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தனர்.

இந்த நிலையில் அவர்களது நட்புக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவிகள் 2 பேரும் மாயமானர்கள்.

இவர்களில் ஒருமாணவி தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் எங்களது விருப்பப்படி நாங்கள் செல்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து பட்டி வீரன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. மாணவிகள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே மாணவிகள் இருவரும் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் ஒன்றாக வேலை பார்ப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் மீட்டனர்.

பின்னர் மாணவிகள் இருவரும் திண்டுக்கல் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். மாணவிகள் இருவருக்கும் போலீசாரும், அதிகாரிகளும் அறிவுரை கூறினர்.

Tags:    

Similar News