கயத்தாறு வட்டார பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய 2 வாலிபர்கள் கைது
- சுப்பையா அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார்.
- திருட்டு குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் விசாரணை நடத்தி வந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பையா. விவசாயி.
பேட்டரி திருட்டு
இவர் அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது டிராக்டரில் உள்ள ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
அதேபோல் கயத்தார் வணிகவளாகத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் தனக்கு சொந்தமான ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை வழக்கம் போல் அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அதில் இருந்த பேட்டரிகளும் திருட்டு போனதாக கயத்தாறு போலீஸ் நிலையத்தில் செய்தனர்.
2 வாலிபர்கள் கைது
இது குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அய்யனார்ஊத்து கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அக்ரி கணேஷ்குமார் (வயது 21), அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கயத்தார் வட்டார பகுதியில் 7 பேட்டரிகளையும், கழுகுமலை பகுதியில் 16, இடங்களில் பேட்டரி களையும் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.