கோவிந்தபுரத்தில், 20 அடி உயர விவேகானந்தர் சிலை திறப்பு
- பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் உருவசிலை.
- விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை செயல்படுகிறது.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.
கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடந்தது.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார்.
கும்பகோணம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.
இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் நன்றி கூறினார்.