செய்திகள்
174 நாட்களாக நடந்த நெடுவாசல் போராட்டம் ஒத்திவைப்பு
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர்.
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுபற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 174 நாட்களாக நடந்த போராட்டம் இன்று தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளை ஓ.என்.ஜி.சி. மீண்டும் தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.