செய்திகள்

மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத 4 டாக்டர்களுக்கு நோட்டீஸ்: கலெக்டர் நடவடிக்கை

Published On 2017-10-24 09:31 GMT   |   Update On 2017-10-24 09:31 GMT
மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத 4 டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகள் இன்று காலை மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டு அறிந்தனர்.

அப்போது 4 டாக்டர்கள் பணியில் இல்லாதது தெரிந்தது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார்.

Similar News