செய்திகள்

கரூரில் வாலிபரை பாட்டிலால் குத்தியவர் கைது

Published On 2018-02-22 13:11 GMT   |   Update On 2018-02-22 13:11 GMT
முன்விரோத தகராறில் வாலிபரை உடைந்த பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், தளவாபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவி(20). இவர் தனது உறவினரின் வீட்டு கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார்(40) என்பவர் வந்திருந்தார். இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததது.

இந்நிலையில் விஜயாகுமார் கையில் மறைத்து வைத்திருந்த உடைந்த பாட்டிலால் ரவியை குத்தினார். இதில் ரவி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ரவியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News