சேலம் அருகே பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் தற்கொலை
சேலம்:
மேச்சேரி அருகே உள்ள சீராமணி பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி வசந்தி (வயது 28). இவர் மேச்சேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இன்று வழக்கம் போல வேலைக்கு வந்த அவர் அங்கு விஷ மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த மற்ற ஊழியர்கள்அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கதறிய படி அங்கு வந்த அவர்கள் சூப்பர் மார்க்கெட்டை முற்று கையிட்டு போராட்டத்தல் ஈடுபட்டனர். மேலும் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தான் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த ஊழியர் மற்றும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.