செய்திகள்
நான்கு ரோட்டில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காட்சி.

அரூரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Published On 2020-05-06 12:21 GMT   |   Update On 2020-05-06 12:21 GMT
அரூர் நகரில் முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
அரூர்:

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தடுக்கும் நோக்கில் அரூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலை, நான்கு ரோட்டில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை, திருவிக நகரில் இருந்து தில்லை நகர் செல்லும் சாலை, அம்பேத்கர் நகரில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆகிய சாலை களில் ஒரு மாதத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டது. 
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வோர் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுற்றி வர வேண்டியுள்ளது. அல்லது வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்பொழுது நகைக்கடை, துணிக்கடை, போன்ற பெரும்பாலான கடைகள் திறக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  சாலைகளில் வாகனங்கள் செல்ல வழியின்றி சீல் வைக்கப்பட்டுள்ளதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிவர வேண்டியுள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சிரமமின்றி வாங்குவதற்கு தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News