செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் மீட்கப்பட்ட கைக்குழந்தை தத்து மையத்தில் ஒப்படைப்பு

Published On 2021-10-01 08:26 GMT   |   Update On 2021-10-01 08:26 GMT
தற்காலிகமாக சேலம் ‘லைப் லைன்’ தத்து மையத்தில் குழந்தை பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டு மித்ரன் என பெயரிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் தலைமை தபால் நிலையம் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த 9 மாத ஆண் குழந்தையை வடக்கு போலீசார் மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை மருத்துவமனையில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு குழு முன் ஒப்படைக்கப்பட்டது. தற்காலிகமாக சேலம் ‘லைப் லைன்’ தத்து மையத்தில் குழந்தை பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டு மித்ரன் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள் 30 நாட்களுக்குள் தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள குழந்தைகள் நலக்குழுவை 0421 2424416, குழந்தைகள் பாதுகாப்பு அலகை 0421 2971198, சேலம் தத்து மையத்தை 94432 11223 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News