இந்தியா

NRC விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தான் ஆதார் வழங்கப்படும் - அசாம் முதல்வர்

Published On 2024-09-08 01:29 GMT   |   Update On 2024-09-08 01:29 GMT
  • அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும்.
  • சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC ) விண்ணப்ப ரசீது எண்ணை (ARN) சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

அக்டோபர் 1 முதல் இந்த புதிய செயல்முறை தொடங்கும் என்றும் சட்டவிரோத வெளிநாட்டினரின் ஊடுருவலை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு நடத்தப்பட்ட போது தவறுதலாக பயோமெட்ரிக்ஸ் லாக் செய்யப்பட்ட 9.55 லட்சம் மக்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்றும் அவர்கள் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் உள்ள மக்கள்தொகை எண்ணிக்கையை விட அதிக அளவிலான ஆதார் கார்டு விண்ணப்பங்கள் வந்தது என்றும் ஆதலால் சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News