செய்திகள்
கோபிநாத்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நபர்களை வெளியேற்ற வேண்டும்-இந்து முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

Published On 2021-10-01 11:07 GMT   |   Update On 2021-10-01 11:07 GMT
திருப்பூரில் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
திருப்பூர்:

இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ரவுடிகளை ஒடுக்கும்விதமாக அனைத்து ரவுடிகளையும் கைது செய்ய உத்தரவிட்டதமிழக அரசிற்கும், தமிழக காவல்துறை டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கும்  இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பாக பாராட்டுகள் கலந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் திருப்பூரில் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்து ஏராளமானோர் பணிபுரிகின்றனர். எனவே திருப்பூரை முக்கியமாக கருத்தில் கொண்டு ரவுடிகளை ஒடுக்க வேண்டும்.

மேலும் திருப்பூரில் நைஜீரியா, பங்களாதேஷ்  நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக முறையான ஆவணமின்றியும் மற்றும் போலி ஆவணங்களை கொண்டும் சட்டவிரோதமாக பல நபர்கள் தங்கியிருக்கின்றனர்.

இவர்கள் பல குற்றசெயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே இதை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News