செய்திகள்
உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணத்தை அறிவித்தார் முதலமைச்சர்
தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்த காவலர் முருகன் மற்றும் தீயணைப்பு வீரர் செந்தில்குமார் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கவிதா (40) என்ற காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து, பெண் காவலர் கவிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டு இருந்தார். தற்போது கூடுதலாக ரூ.15 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த பெண் காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள்... வடகிழக்கு பருவமழை தீவிரம்- திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பலத்த மழை எச்சரிக்கை