உள்ளூர் செய்திகள்
தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார்

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது- தமிழக தேர்தல் ஆணையர்

Published On 2022-02-23 09:57 GMT   |   Update On 2022-02-23 09:57 GMT
புவனகிரி பேரூராட்சி பகுதியை தவிர தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலூர் மாவட்டம்,  புவனகிரி பேரூராட்சி பகுதியை தவிர) தொடர்ந்து, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Similar News