உள்ளூர் செய்திகள்
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 33,247 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பதில்
சாலை விபத்தில் சிக்குபவர்களை ‘கோல்டன் அவர்ஸ்’ என்று அழைக்கக் கூடிய குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சேர்ப்பவர்களுக்கு நற்கருணை விருதுடன் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது.
கேள்வி நேரத்தின் போது சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. இரா. அருள் தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசே முன் வருமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே சாலை விபத்துக்கள் கவலை அளிப்பதாக உரையாற்றி இருக்கிறேன். ஆட்சி பொறுப்பேற்றவுடன் சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தினோம். இதன்படி உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினோம்.
அதில் இன்னுயிர் காப்போம் என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி விபத்தில் சிக்குபவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சையுடன் 5 அம்ச திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேல்மருவத்தூர் சென்று நானே தொடங்கி வைத்தேன்.
இத்திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,150 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 33,247 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம் 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. 29.56 கோடி செலவில் முழு வீச்சில் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்து சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்காத வகையில் செயல்படுவோம் என்று உறுதி ஏற்போம்.
அருள் எம்.எல்.ஏ.:- சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக அனுமதிக்கும் தன்னார்வலர்களை இந்த அரசு ஊக்குவிக்குமா?
மு.க.ஸ்டாலின்:- சாலை விபத்தில் சிக்குபவர்களை ‘கோல்டன் அவர்ஸ்’ என்று அழைக்கக் கூடிய குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சேர்ப்பவர்களுக்கு நற்கருணை விருதுடன் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சி- கொரோனா ஒருநாள் பாதிப்பு 1,549 ஆக குறைந்தது