உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அங்கன்வாடி மைய குழந்தைகளின் உடல் நிலை பரிசோதனை

Published On 2022-05-28 10:13 GMT   |   Update On 2022-05-28 10:13 GMT
அங்கன்வாடிகளை குழுவாக பிரித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

திருப்பூர்:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், 'போஷான்' திட்டம் மூலம் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் உடல் நிலை பரிசோதனை நடத்தப்பட்டது.முன்னதாக, தேசிய ஊட்டச்சத்து கழகம் சார்பிலும், ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

இருவகை ஆய்வுகளிலும் 10 முதல், 20 சதவீதம் குழந்தைகள், வயதுக்கு ஏற்ற உயரமும், எடையும் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, குழந்தைகள் வகைப்படுத்தப்படுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளில், மருத்துவ சேவை தேவையானவர்கள், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவு தேவையான குழந்தைகள் என பிரிக்கப்பட்டு டாக்டர் குழுவால் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.

ஊட்டச்சத்து உணவு வழங்கி, உடல்நிலை மேம்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து அங்கன்வாடிகளை குழுவாக பிரித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.  

Tags:    

Similar News