உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சரக்கு ரெயிலில் புதுடெல்லிக்கு பொருட்களை அனுப்பலாம்

Published On 2022-05-30 07:51 GMT   |   Update On 2022-05-30 07:51 GMT
இணையதளத்தில் விபரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

கோவையில் இருந்து புதுடில்லி செல்லும் சரக்கு ரெயிலில் தங்களது பொருட்களை அனுப்ப விரும்புவோர், முன்பதிவு செய்யலாம் என திருப்பூர் ரெயில்வே வணிகப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக சரக்கு ெரயில் இயங்கி வருகிறது. துணி, மருந்து, காய்கறி, பழம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரெயில் இயக்கம், மே இரண்டாவது வாரம் முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை பயணிக்கிறது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து ெரயில் புறப்படும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழியாக புதுடில்லி சென்று சேரும்.அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் வெள்ளி இரவு, 8:30க்கு கோவை வந்தடையும். இந்த ரெயிலில் தங்களது பொருட்கள், சரக்குகளை அனுப்ப விரும்புவோர் 70109 97007 என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு, parcel.indianrail.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News