உள்ளூர் செய்திகள் (District)

கைது செய்யப்பட்ட சீனிவாசு

உர விற்பனையில் ரூ.22 லட்சம் கையாடல்

Published On 2022-10-28 09:46 GMT   |   Update On 2022-10-28 09:46 GMT
  • இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் .
  • ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

நாமக்கல்:

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் மூலம் கிராமபுறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் இ பசாரில் நாமக்கல் லைன் தெருவைச்சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு(வயது 30) என்பவர் விற்பனை யாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த இ பசார் மாநில அலுவலர் ஹைதராபாத்தை சேர்ந்த புன்னம்ராஜு கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்தில் தணிக்கை செய்தார்.

அப்போது உரவிற்பனை செய்து நிறுவனத்திடம் பணம் கட்டாமல் சீனிவாசன் தனது இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தியது தணிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புன்னம்ராஜ் புகார் அளித்தார்.

இது குறித்து மாவட்ட குற்றப்பபிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். பருவ மழை காலத்தில் உரம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் உர மோசடியால் கொக்கராயன் பேட்டையில் இப்கோ இ பசார் கடை மூடப்பட்டதால் விவசாயிகள் கடையை திறக்க கோரிக்கை விடுத்து ள்ளனர்.

Tags:    

Similar News