அனைவருக்கும் 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும்
- ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
- போனஸ் விதிகளின்படி அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.
அஞ்சலி தீர்மானத்தை மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி வாசித்தார்.
ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.
நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் வேலை அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் ராஜமன்னன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரவை புதிய நிர்வாகிகளாக தலைவர் சேகர், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் நேருதுரை பேரவையை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.
இந்த பேரவையில் திருத்தப்பட்ட போனஸ் விதிகளின்படி பஸ்பாடி கிளீனர், கேன்வாசர் உள்ளிட்ட அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், தங்கராசு, தமிழ்மன்னன், ரெங்கதுரை, வீரையன், முருகவேல், சுமன், இளங்கோவன், சுகுமார், நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.