சென்னையில் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு இலவச வெறிநாய் தடுப்பூசி- 250 செல்லப்பிராணிகளுக்கு போடப்பட்டன
- தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர்.
- பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை:
உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் இன்றும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாதவரத்தில் உள்ள புறநகர் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர். வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சவுந்தர்ராஜன், டாக்டர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.